உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யனார் கோவில் மஞ்சுவிரட்டு விழா

அய்யனார் கோவில் மஞ்சுவிரட்டு விழா

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் உப்பூர் அருகே வெட்டுக்குளம் அய்யனார் கோவில் விழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது. உள்ளூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து வந்திருந்த காளைகளின் கழுத்தில், துண்டு கட்டப்பட்டு, காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவிழ்த்து விடப்பட்ட காளைகளை வீரர்கள் அடங்கினர். பெரும்பாலான காளைகள் வீரர்களின் பிடியில் இருந்து, தப்பி சென்றன. விழாவை முன்னிட்டு முன்னதாக மூலவருக்கு 18 வகையான, அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு கிராமத்தினர் வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !