உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்துாரில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

திருச்செந்துாரில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. தொடர்ந்து கொடிமரத்திற்கு16 வகை அபிஷேகங்கள் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. திருவிழாவின் முக்கிய திருநாட்களான 21ம் தேதி குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது. 23ம் தேதி மாலையில் சுவாமி சண்முகர் சிவப்பு நிற பட்டு உடுத்தி சிவன் அம்சமாகவும், 24ம் தே தி அதிகாலையில் சுவாமி வெண்பட்டு அணிந்து பிரம்மாஅம்சமாகவும், அன்று பகல் 10.30 மணிக்கு மேல் பச்சை நிற பட்டு உடுத்தி பெருமாள் அம்சமாகவும் காட்சி அளிக்கிறார். 26ம் தேதி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !