உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயில் ஆவணி பால்குட திருவிழா

பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயில் ஆவணி பால்குட திருவிழா

பரமக்குடி: பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயில் 30 ஆவது ஆண்டு ஆவணி மற்றும் பால்குட திருவிழா நடந்தது. இக்கோயிலில் ஆக. 8 அன்று காலை 7:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன், காப்பு கட்டுதல் நடந்தது. அன்று முதல் தினமும் மூலவர் மற்றும் உற்சவர் அம்மன் சந்தன காப்பு, மீனாட்சி அம்மன், காமாட்சி, குமரி, சரஸ்வதி, மகாலட்சுமி, சிவ பூஜை, ராஜராஜேஸ்வரி மற்றும் வெள்ளி கவச அலங்காரங்களில் அருள் பாலித்தார். தினமும் மாலை பஜனைகள் பாடப்பட்டு, இரவு 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இன்று காலை 9:00 மணிக்கு வைகை ஆற்றில் இருந்து பால் குடம், தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்களுடன் பால் அபிஷேகம் நடத்தப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை திருவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து அம்மன் குதிரை வாகனத்தில் அலங்காரமாகி வீதி வலம் வந்தார். ஏற்பாடுகளை தலைவர் நடராஜன், செயலாளர் கணேசன், பொருளாளர் ராஜாராம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !