மதுரை நவநீதகிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
ADDED :1160 days ago
மதுரை: மதுரை, வடக்கு மாசி வீதி நவநீதகிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
கண்ணன் ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய நல்ல நாளில் அவதரித்தவர். கண்ணனின் பிறந்தநாளை ஜென்மாஷ்டமியாக நாடு முழுவதும் நாளை கொண்டாடுகின்றோம். இன்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நவநீதகிருஷ்ணன் கோயிலில், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சத்தியபாமா ருக்மணியுடன் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.