உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொள்ளூர் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

கொள்ளூர் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

சங்கராபுரம், சங்கராபுரம் அடுத்த வடசிறுவளுர் கொள்ளூர் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.அதனையொட்டி, நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. பின் தேரில் அம்மன் எழுந்தருளச் செய்தனர். தொடர்ந்து, சங்கராபுரம் எம்.எல்.ஏ., உதயசூரியன், ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், சேர்மன் திலகவதி நாகராஜன் ஆகியோர் தேர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.திரளான பக்தர்கள் தேரை இழுத்தனர். ஏற்பாடுகளை ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !