காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆந்திர சட்டப்பேரவை சபாநாயகர் தரிசனம்
ADDED :1482 days ago
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு ஆந்திர மாநில சட்டப்பேரவை சபாநாயகர் தம்மினேனி. சீதாராம் அவர்கள் தன்னுடைய குடும்பத்தாரோடு சாமி தரிசனம் செய்ய வந்தவரை ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி மற்றும் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சுரு தாரக சீனிவாசலு ,கோயில் நிர்வாக அதிகாரி பாபு மற்றும் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்தனர். கோவிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் (ஸ்ரீ காளஹஸ்திக்கு பெயர் பெற்று தந்துள்ள கலம்காரி சால்வை)பொன்னாடைப் போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் வழங்கினர்.மேலும் கோயில் வேத பண்டிதர்கள் சிறப்பு ஆசிர்வாதம் செய்ததோடு சாமி படத்தையும் வழங்கினார்கள்.