உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 1700 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை; ஆக., 31ல் சதுர்த்தி ஊர்வலத்திற்கு ஏற்பாடு

1700 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை; ஆக., 31ல் சதுர்த்தி ஊர்வலத்திற்கு ஏற்பாடு

தேனி : தேனி மாவட்டத்தில் 1700 இடங்களில் ஆக.31ல் நடக்கும் சதுர்த்தி விழாவிற்காக விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து தயார் நிலையில் உள்ளன.

தேனி மாவட்டத்தில் ஆக., 31ல் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. ஹிந்து முன்னணி, ஹிந்து எழுச்சி முன்னணி, ஹிந்து மக்கள் கட்சி, சிவசேனா உட்பட பல்வேறு ஹிந்து அமைப்புகளின் சார்பில் 1700க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜைகள் செய்து நீர் நிலைகளில் கரைக்கப்பட உள்ளன. இந்நிலையில் விநாயகர் சதுர்த்திக்காக தேனியில் டெலிபோன் நகர், அன்னஞ்சி விலக்கு, காந்திநகர் பகுதிகளில் சிலைகள் தயாரிக்கப்படுகிறது.

இதில் அமர்க்கள விநாயகர், அன்னம், சிம்மம், மூஞ்சூர், கஜ, பசு, சிங்க வாகனங்களில் விநாயகர் வீற்றிருக்கும் சிலைகள் நிலையில் உள்ளன. மூன்று அடி முதல் 11 அடி வரை விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஹிந்து முன்னணி சார்பில் 1100 இடங்களிலும், ஹந்து எழுச்சி முன்னணி சார்பில் 250 இடங்களிலும் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. மற்றும் சிவசேனா, ஹிந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இயக்கங்கள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !