முத்துமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED :1180 days ago
திண்டிவனம் : திண்டிவனம் முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, விளக்கு பூஜை நடந்தது.அதனையொட்டி, கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 15ம் தேதி திருக்கல்யாணமும், 16ம் தேதி ஊஞ்சல் உற்சவமும் நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் சந்தனக்காப்பு அலங்காரமும், திருவிளக்கு பூஜை நடந்தது.திரளான பெண்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி வெங்கடேசன், அர்ச்சகர்கள் எத்திராஜ், சுரேஷ்குமார் செய்திருந்தனர்.