சித்தூர் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :1178 days ago
ஸ்ரீ காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐராலா மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் இன்று (21ம் தேதி) கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. மகா கும்பாபிஷேகத்தையொட்டி செவ்வாய் கிழமை காலை கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலை அருகில் வேத ஸ்வஸ்தி, யாகசாலை பிரவேசம், கலச ஸ்தாபனம் ,கணபதி ஹோமம், சத்துருவேத ஆவாஹனம், மந்திரபுஷ்பம் போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து, கால பூஜைகளுக்கு பின் இன்று காலை கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.