நவநீத கிருஷ்ணன் கோயலில் பூ பல்லக்கு உற்ஸவம்
ADDED :1362 days ago
அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் அருகே குமாரம் ரங்கராஜபுரம் நவநீத கிருஷ்ணன் கோயலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. முதல் நாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், ஆராதனைகள் நடந்தன.பின் சுவாமி மின் அலங்கார பூ பல்லக்கில் குமாரம், மணியஞ்சி உள்ளிட்ட கிராமங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பெண்கள் கோயில் முன் பாரம்பரிய முறையில் பனை ஓலையில் பொங்கல் வைத்து வழிபட்டனர். நேற்று காலை கிராம இளைஞர்கள் பங்கேற்ற உரியடி மற்றும் வழுக்கு மரம் ஏறும் போட்டி நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். ஏற்பாடுகளை விழா குழுவினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.