உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எமனேஸ்வரத்தில் கல்யாண கிருஷ்ணர் திருக்கல்யாணம்

எமனேஸ்வரத்தில் கல்யாண கிருஷ்ணர் திருக்கல்யாணம்

பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் ராதா கிருஷ்ணன் பஜனை மடம், பாமா, ருக்மணி சமேத கல்யாண கிருஷ்ணர் கோயிலில் திருக்கல்யாண விழா நடந்தது.

இக்கோயிலில் 6 ம் ஆண்டு கோகுலாஷ்டமி விழா நடந்தது. இதனை ஒட்டி ஆக. 19 அன்று விழா தொடங்கி, நேற்று காலை 11:00 மணிக்கு பாமா, ருக்மணி சமேத கல்யாண கிருஷ்ணருக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு உற்சவர் வீதி வலம் வந்தார். இன்று திருவிளக்கு வழிபாடு நடந்தது.
 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !