உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்மசாலி பேட்டை ராமர் கோயிலில் கும்பாபிஷேக சிறப்பு பூஜை

பத்மசாலி பேட்டை ராமர் கோயிலில் கும்பாபிஷேக சிறப்பு பூஜை

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி அடுத்துள்ள பத்மசாலி பேட்டை யில் உள்ள பழமை வாய்ந்த ராமர் கோயிலை  புணரமைக்கும் பணி நிறைவடைந்ததை யொட்டி இன்று கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வை கோயில் கமிட்டி உறுப்பினர்கள் அங்கங்க வைப்போமாக நடத்தினர் நிகழ்ச்சியில் இன்று சீதாதேவி சமேத ஸ்ரீ ராமர், லக்ஷ்மன்,அனுமந்தன் சிலைகளுக்கு வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க சாஸ்திர பூர்வமாக கும்பாபிஷேக சிறப்பு பூஜைகளை நடத்தினர் . பின்னர் சுவாமி அம்மையார்களின் (சீதாராமர்) திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது .இக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி அம்மையார் தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து கோயில் கமிட்டி உறுப்பினர்கள் பக்தர்களுக்கு அன்னதான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !