உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் சதுர்த்தி விழா கோவில்கள் புதுப்பொலிவு

விநாயகர் சதுர்த்தி விழா கோவில்கள் புதுப்பொலிவு

காஞ்சிபுரம், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள விநாயகர் கோவில்கள் புதுப்பொலிவு பெற்று வருகின்றன.நாடு முழுதும் விநாயகர் சதுர்த்தி விழா வரும் 31ல் கொண்டாடப்பட உள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்த அரசு தடை விதித்து இருந்தது.இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால், நடப்பு ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு, பொது இடங்களில் சிலை வைத்து வழிபாடு நடத்த பல்வேறு நிபந்தனைகளுடன் அரசு அனுமதி வழங்கியுள்ளது.இதை தொடர்ந்து, பொது இடங்களில் வழிபாடு நடத்துவதற்காக சின்ன காஞ்சிபுரம், அய்யம்பேட்டை பகுதியில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.அதேபோல், காஞ்சிபுரத்தில் தெருக்கள், குடியிருப்பு பகுதிகள், சாலையோரம் உள்ள பல்வேறு விநாயகர் கோவில்களும் சதுர்த்தி விழாவையொட்டி புதுப்பொலிவு பெற்று வருகின்றன.இதில், கோவில் கோபுரம், பிரதான நுழைவாயில் இரும்பு கேட், மூலவர் சன்னதி கதவு, சுற்றுச்சுவர் பகுதிக்கு வண்ணம் தீட்டும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !