அன்னூர் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :1253 days ago
அன்னூர்: அன்னூர் பெருமாள் கோவிலில், பவித்ர உற்சவத்தில் இன்று திருக்கல்யாணம் நடக்கிறது.
அன்னூர், ஸ்ரீதேவி, பூதேவி, உடனமர், கரிவரதராஜ பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவ விழா கடந்த 22ம் தேதி பவித்ர பிரதிஷ்டை உடன் துவங்கியது. மூன்று நாட்கள் காலையில், ரட்ச பந்தனமும், சதுஸ்தான ஆராதனையும், மாலையில் 90 ஆராதனையும், சாற்று முறையும் நடந்தது. நாளை காலை 8:00 மணிக்கு திருமஞ்சனம், தீர்த்த வாரி நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு, கரி வரதராஜ பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை பவித்திர உற்சவ விழா குழுவினர் செய்து வருகின்றனர்.