உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரங்கநாதர் கோவிலில் பிரதிஷ்டா தின விழா : பக்தர்கள் தரிசனம்

அரங்கநாதர் கோவிலில் பிரதிஷ்டா தின விழா : பக்தர்கள் தரிசனம்

தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூரில் உள்ள அரங்கநாதர் கோவிலில், ஐந்தாம் ஆண்டு பிரதிஷ்டா தின விழா நடந்தது. தொண்டாமுத்தூரில், ஸ்ரீ அரங்கநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஐந்தாம் ஆண்டு பிரதிஷ்டா தின விழா நடந்தது. இதில், காலை, 8:00 மணிக்கு, அரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சனமும்; காலை, 9:30 மணிக்கு, மகா சங்கல்பத்துடன் யாகம் துவங்கியது. காலை, 11:00 மணிக்கு, மஹாபூர்ணஹூதி நடைபெற்றது. 11:15 மணிக்கு, கலசங்கள் புறப்பாடும்; 11:30 மணிக்கு, கலச தீர்த்த அபிஷேகம் மற்றும் சாற்றுமுறையும் நடந்தது. காலை, 11:45 மணிக்கு, அரங்கநாதருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை நடந்தது. மாலையில், அரங்கநாதர் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அரங்கநாதரை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !