வள்ளலார் சத்திய ஞான சபையில் ஆவணி பூச ஜோதி தரிசனம்
ADDED :1251 days ago
வடலூர்: வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் ஆவணி மாத பூச ஜோதி தரிசனம் நேற்று நடந்தது.
வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்ய ஞான சபை உள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தன்று ஆறு திரை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம். ஆவணி மாதம் நேற்று பிரதோஷத்தன்று இம்மாத ஜோதி தரிசனம் நடந்தது சிறப்பு ஆகும். நேற்று இரவு சத்திய ஞான சபையின் 7 45 மணி முதல் 8 45 மணி வரை ஆறு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் நடந்தது. தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான சன்மார்க்க பக்தர்கள் கலந்து கொண்டு ஜோதி தரிசனத்தை கண்டுகளித்தனர்.