உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

தேவகோட்டை: தேவகோட்டை கண்டதேவி ரோட்டில் சேவுகன் அண்ணாமலை மெட்ரிக் பள்ளி வளாகத்தில் உள்ள வல்லபை விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ரவிக்குருக்கள் தலைமையில் இரண்டு கால யாக சாலை பூஜைகள் நடந்தன. ஜமீன்தார் சோமநாராயணன் முன்னிலை நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் ஆட்சிக்குழு தலைவர் லட்சுமணன், துணைத் தலைவர் சேவுகன், செயலர் சாந்தி, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஜெயம் அண்ணாமலை, சேவுகன் அண்ணாமலை உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ஆன்மிக எழுத்தாளர் சீனிவாசன் விநாயகரின் பெருமை பற்றி சொற்பொழிவாற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !