ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் தைலகாப்பு சேவை
ADDED :1240 days ago
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில்மூலவர் பெரிய பெருமாளுக்கு தைலகாப்பு சாற்றப்பட்டு திருவடி திரையிடப்பட்டு திருமுகம் மட்டும் பக்தர்களுக்கு சேவை ஆகிவந்தது. தைலகாப்பு உலர்ந்துவிட்டபடியால் இன்று முதல், ஆவணி மாதம் 10ம் தேதி வெள்ளிக்கிழமை மூலவர் பெரிய பெருமாளுக்கு புணுகாப்பு சாற்றி திருவடி சேவையை மதியம் 3.00 முதல் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.