உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.99 கோடி

பழநி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.99 கோடி

பழநி: பழநி மலைக்கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ 2 கோடியே 99 லட்சம் கிடைத்துள்ளது. பழநியில் மலைக்கோயிலில் ஆக. 24,25ல்‌ உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. இதில் நேற்று (ஆக 25ல்‌) காணிக்கையாக 49 கிராம் தங்கமும், 767 கிராம் வெள்ளியும் கிடைத்தது. மேலும் ரூ. 45 லட்சத்து 48 ஆயிரத்து 665 மற்றும் 113 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. இருநாட்கள் உண்டியல் எண்ணிக்கையில் காணிக்கையாக 1,182 கிராம் தங்கமும், 12 ஆயிரத்து 601 கிராம் வெள்ளியும் கிடைத்தது. மேலும் ரூ. 2 கோடியே 99 லட்சத்து 8ஆயிரத்து 395, மற்றும் 951 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணிக்கையில் இணை ஆணையர் நடராஜன், அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !