கடமையை செய்வதில்தானே ஆனந்தம்
ADDED :1212 days ago
இயற்கையின் அனைத்து அங்கங்களும் நமக்கு ஆயிரம் விஷயங்களை சொல்கின்றன. உதாரணமாக நதியானது தொடக்கம் முதல் கடலில் சேரும் வரை பாடத்தை நடத்துகிறது. சிறிய நீர்ப்பெருக்காக வாழ்வைத் தொடங்குகிறது நதி. பிறந்த இடத்திலேயே தேங்கி நிற்காமல், ஒவ்வோர் அடியாய் முன்னோக்கி நகர்கிறது. ‘எல்லா உயிர்களுக்கும் நானே ஆதாரம்’ என்று ஆணவம் கொள்ளாமல் கடமையை செய்கிறது. அதுபோல் நாமும் ஆனந்தமாக கடமையை செய்தால், வெற்றி பெறலாம்.