உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா : தங்க கவசத்தில் சுவாமி

அருணாசலேஸ்வரர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா : தங்க கவசத்தில் சுவாமி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விநாயகர் சதுர்த்தி விழாவில், மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதி உலா நடந்தது.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சுவாமி சன்னதி அருகேயுள்ள சம்பந்த விநாயகர் சன்னதியிலுள்ள மூலவர் விநாயகர் மற்றும் உற்சவர் விநாயகர் ஆகியோருக்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு அபிஷேகம் செய்தனர். பின்,  தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து, மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !