காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா
ஸ்ரீ காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐராலா மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் ( இன்று 31.8.2022) விநாயகர் சதுர்த்தி அன்று வரவிருக்கும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளின் ஏற்பாடுகளை சித்தூர் மாவட்ட எஸ். பி.ரிஷாந்த் சர்மா, மாவட்ட கலெக்டர் ஹரி நாராயணா மற்றும் அதிகாரிகள் கோயிலில் பார்வையிட்டனர் .நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் காணிப்பாக்கம் விநாயகர் கோவிலுக்கு வருவது வழக்கம்.இதனால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கூடுதல் வரிசைகள், வாகனங்கள் நிறுத்தும் இடம் மாட வீதிகள் உட்பட கோயில் வளாகத்தில் அனைத்து பகுதிகளிலும் பார்வையிட்டதோடு பாதுகாப்பு பணிகள் போன்றவை குறித்து கோயில் அதிகாரிகளிடம் கேட்டறிந்ததோடு பக்தர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்படாத வகையிலும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் கோயில் நிர்வாகம் செய்யப்பட்டிருந்ததை பார்வையிட்டனர். இவர்களுடன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் மோகன் ரெட்டி, கோயில் நிர்வாக அதிகாரி சுரேஷ் பாபு , கோயில் அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.