உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு ராட்சத கொழுக்கட்டை படையல்

மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு ராட்சத கொழுக்கட்டை படையல்

திருச்சி : விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு 150 கிலோ எடைகொண்ட ராட்சத கொழுக்கட்டை படைக்கப்பட்டது.

மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று காலை 8 மணிக்கு கஜ பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, 9 மணிக்கு தாயுமான சுவாமி கோவிலில் தயாரிக்கப்பட்ட 150 கிலோ எடை கொண்ட ராட்சத கொழுக்கட்டையை தொட்டில் கட்டி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகருக்கு தலா 75 கிலோவில் படையலிட்டு நைவேத்தியம் செய்ய ஓதுவார்கள் தூக்கிச் சென்றனர். பின்னர் சிறப்பு பூஜைகளுக்கு பின் உச்சிப்பிள்ளையாருக்கு படைக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !