கொடைக்கானல் மலைப்பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா
ADDED :1240 days ago
கொடைக்கானல், கொடைக்கானல் மற்றும் தாண்டிக்குடி மலைப்பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடந்தது. இங்குள்ள கோயில்களில் அபிஷேக, ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கொடைக்கானல் நகரில் ஏராளமான இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடந்தது. இது போன்று பண்ணைக்காடு, தாண்டிக்குடி கீழ் மலை பகுதிகளிலும் சதுர்த்தி விழா நடந்தது. அலங்காரத்தில் காட்சியளித்த விநாயகரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் வழுக்கு மரம் ஏறுதல் கலை நிகழ்ச்சிகள் விளையாட்டு போட்டிகள் நடந்தன.