ராஜ அலங்காரத்தில் சுந்தரமூர்த்தி விநாயகர் பெருமான் அருள்பாலிப்பு
ADDED :1239 days ago
அவிநாசி: சுந்தரமூர்த்தி விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராஜ அலங்காரத்தில் சுந்தரமூர்த்தி விநாயக பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அவிநாசி அடுத்த அவிநாசிலிங்கம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள சுந்தரமூர்த்தி விநாயகர் கோவிலில், நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அதிகாலையில் மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. மேலும், விநாயக பெருமானுக்கு 16 வகையான திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்று ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும், வேத பாராயணங்களுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.