விநாயகர் சிலை ஊர்வலம்: துவக்கி வைத்த முஸ்லிம்
ADDED :1139 days ago
சிதம்பரம் : சிதம்பரம் அருகே மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக, முஸ்லிம் ஒருவர் விநாயகர் சிலை ஊர்வலத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த குமராட்சி கிராமத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. குமராட்சி ஊராட்சி தலைவர் தமிழ்வாணன் தலைமை தாங்கினார்.மத நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டும் வகையில், அப்துல் பாசித், 60, என்ற முஸ்லிம் பெரியவர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, ஊர்வலத்தை கொடி அசைத்து துவக்கி வைத்து, இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் அந்த பகுதியை சேர்ந்த பலர் பங்கேற்றனர். அனைத்து வீதிகள் வழியாக விநாயகர் ஊர்வலம் சென்றது.மாலை 5:00 மணிக்கு ராஜன் வாய்க்காலில் சிலை கரைக்கப்பட்டது. குமராட்சி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.