உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.

அருப்புக்கோட்டை தேவாங்கர் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயில், கைலாச விநாயகர் கோயில், வாழ வந்த அம்மன் கோயில், ஐயப்பன் கோயில், லட்சுமி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஐந்து திருக்கோயில்களின் கும்பாபிஷேகத்தை தேவாங்கர் குல தயா னந்தபுரி சுவாமிகள் தலைமையில் நடத்தப்பட்டது. விக்னேஸ்வர பூஜை, தன பூஜை, சரஸ்வதி பூஜை, புனித தீர்த்தம் கொண்டு வருதல், பிரவேச பலி, முதல் கால யாக பூஜை, ருத்ர பாராயணம், பூர்ணா குதி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலை 7.30 மணிக்கு மேல் ஆறாம் கால பூஜை துவங்கப்பட்டு, நாடி சந்தானம், நவக்கிரக ஹோமம், நிகழ்ச்சிக்குப் பின், ஆலயங்களுக்கு கடம் புறப்பாடு, அனைத்து ஆலய விமானம், மூலவர் பரிவாரங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !