உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாழவந்த அம்மன் கோயில் முளைக்கொட்டு விழா

வாழவந்த அம்மன் கோயில் முளைக்கொட்டு விழா

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே வெங்கலக்குறிச்சி கிராமம் வாழவந்த அம்மன் கோயில் முளைக்கொட்டு விழா முன்னிட்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர்.கோயில் முன்பு பக்தர்கள் பொங்கல் வைத்து,கிடா வெட்டி நேர்த்திகடன் செலுத்தினர்.வாழவந்த அம்மனுக்கு பால்,சந்தனம், மஞ்சள்,திரவிய பொடி உட்பட 16 வகையான அபிஷேகங்கள், தீபாராதனை நடந்தது.பின்பு முளைக்கொட்டு திண்ணையில் இருந்து கோயில் உட்பட முக்கிய வீதிகளில் கிராமமக்கள் முளைப்பாரி ஊர்வலமாக தூக்கி சென்று ஊரணியில் கரைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !