அழகு வள்ளி அம்மன் கோயில் முளைப்பாரி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED :1465 days ago
கமுதி: கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் அழகு வள்ளிஅம்மன் கோயில் ஆவணி மாத பொங்கல், முளைப்பாரி விழா நடைபெற உள்ளது. இதனைமுன்னிட்டு கணபதி ஹோமம் தொடங்கி யாகசாலை பூஜை, கொடிமரத்திற்கு சிறப்புபூஜை நடந்தது. பின்பு கொடியேற்றப்பட்டு பக்தர்களுக்கு காப்புகட்டப்பட்டது. மூலவரான அம்மனுக்கு பால்,தயிர், சந்தனம் உட்பட 21 வகையான அபிஷேகங்கள்,தீபாரதனை நடந்தது. தினந்தோறும் இரவு சிறப்பு பூஜைகள் நடைபெறும். செப். 12ம் தேதி விளக்கு பூஜை, 13ம் தேதி பொங்கல் விழா,14ம் தேதி பால்குடம், அக்கினிசட்டி, சேத்தாண்டி வேடம், முளைப்பாரி ஊர்வலம் நடைபெறும்.