வெற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா
ADDED :1168 days ago
சிக்கல்: வாலிநோக்கம் அருகே கீழக்கிடாரம் சந்திரா நகரில் உள்ள சரண்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வெற்றி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.
நேற்று முன்தினம் அனுக்ஞை, ரக்க்ஷா பந்தனம், கும்ப அலங்காரத்துடன் முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை 9 மணி அளவில் விநாயகர் வழிபாடு, கோ பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகளுக்கு பின்னர் கொத்தங்குளம் மாதவன் பட்டாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். வெற்றி விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஏற்பாடுகளை சரண்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் பால்சாமி, வெற்றி விநாயகர் கல்வி அறக்கட்டளை கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.