உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உருகாதேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

உருகாதேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

அன்னூர்: செட்டிபாளையம் உருகாதேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.

மசக்கவுண்டன் செட்டிபாளையத்தில், 250 ஆண்டுகள் பழமையான உம்மத்தூர் உருகாதேஸ்வரி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து கும்பாபிஷேக விழா கடந்த 3ம் தேதி வேள்வி பூஜை உடன் துவங்கியது. கடந்த 4ம் தேதி காலை வேத பாராயணமும் மாலையில் கலசங்கள் நிறுவுதலும் நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு கோபுரம்,, கணபதி, பாலமுருகன், உருகாதேஸ்வரி மாரியம்மன் ஆகியவற்றிற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து தச தரிசனம், தீபாராதனை நடந்தது. 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !