மேலும் செய்திகள்
அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
1093 days ago
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
1093 days ago
விலங்கல்பட்டு சிவசுப்பரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
1093 days ago
ஆந்திரா: காக்கிநாடாவில் உள்ள ஸ்ரீமடம் முகாமில் ‘தேவுனி ஸ்வரம் புத்தக வெளியீடு நடைபெற்றது.ஆந்திரப் பிரதேசம், காக்கிநாடாவில் உள்ள ஸ்ரீமடம் முகாமில் ஜெகத்குரு பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிஜி அவர்கள் வழங்கிய அருளுரைகளின் தொகுப்பு, ‘தேவுனி ஸ்வரம்’ புத்தக வெளியீடு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் இன்று (7 ம் தேதி) வெளியிடப்பட்டது. 5000 பக்கங்கள் கொண்ட இந்நூல் 7 தொகுதிகளாக பிரித்து, ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமி பீதரோஹண சதாப்தி அறக்கட்டளையால் வெளியிடப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற இந்த புத்தக வெளியீடு விழாவில், சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டு வரும் பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் கலந்து கொண்டு ஆசி வழங்கினார். மகா பெரியவாவின் தெய்வத்தின் குறள், 70 வருட அருளுரை 7 பகுதிகளாக தெலுங்கில் மொழி பெயர்க்கப்பட்டு தேவுனி ஸ்வரம்’ புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
1093 days ago
1093 days ago
1093 days ago