மேலும் செய்திகள்
அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
1094 days ago
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
1094 days ago
விலங்கல்பட்டு சிவசுப்பரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
1094 days ago
சூலூர்: சீபா நகர் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.அரசூர் மற்றும் கணியூர் ஊராட்சிக்கு உட்பட்டது சீபா நகர். இங்குள்ள செல்வ விநாயகர் கோவிலில் கோபுரங்களுக்கு வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் முடிந்து, கடந்த, 6 ம்தேதி காலை, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. இரண்டு கால ஹோமங்கள், பூர்ணாகுதி முடிந்து, இன்று காலை, 6:15 மணிக்கு புனித நீர் கலசங்கள் கோவிலை சுற்றி, மேள, தாளத்துடன் எடுத்து வரப்பட்டன. காலை, 6:30 மணிக்கு, விமானத்துக்கும், 7:00 மணிக்கு, செல்வ விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. அரசு, வேம்புக்கு திருக்கல்யாணமும், ஊஞ்சப்பாளையம் காவடி குழுவின் காவடி ஆட்டமும், அம்மன் கலைக்குழு வின் ஒயிலாட்டமும் நடந்தது.
1094 days ago
1094 days ago
1094 days ago