ஆடிக்கிருத்திகை; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கோலாகலம்
மருதமலை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆடிக்கிருத்திகையையொட்டி, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
முருகனின் ஏழாம் படை வீடாக, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. ஆடிக்கிருத்திகை தினமான இன்று காலை முதலே பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது. ஆடிக்கிருத்திகையையொட்டி, நேற்று காலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை, 6:00 மணிக்கு, சிறப்பு பூஜை நடந்தது. சுப்பிரமணிய சுவாமி, ரத்ன அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து, திருக்கல்யாண மண்டபத்தில், வள்ளி, தெய்வானையுடன் உற்சவ மூர்த்தி எழுந்தருளினார். பக்தர்களின் வசதிக்காக, திருக்கோயில் பஸ் மற்றும் அரசு பஸ்கள், அடிவாரத்தில் இருந்து மலைமேல் உள்ள பார்க்கிங் வரை இயக்கப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.