உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வல்லப்பாக்கம் அகத்தீஸ்வரர் கோவிலில் வரும் 30ம் தேதி கும்பாபிஷேகம்

வல்லப்பாக்கம் அகத்தீஸ்வரர் கோவிலில் வரும் 30ம் தேதி கும்பாபிஷேகம்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூராட்சி, வல்லப்பாக்கம் அகத்தீஸ்வரர் கோவிலில், வரும் 30ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.


வாலாஜாபாத் பேரூராட்சி, வல்லப்பாக்கம் கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலான வடிவாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. அகத்தீஸ்வரர் மற்றும் வடிவாம்பிகை சன்னிதி மேற்கு முகமாக வீற்றிருப்பது இக்கோவிலின் தனி சிறப்பாக விளங்குகிறது. இந்த கோவிலில் கடந்த 2010ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து, கோவில் கட்டடம் மற்றும் கோபுர பகுதிகளில் கான்கிரீட் பெயர்ந்து சிதிலம் அடைந்ததை சீர் செய்து கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் மற்றும் அப்பகுதி மக்கள் சார்பில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, இக்கோவிலில், அகத்தீஸ்வரர், வடிவாம்பிகை மற்றும் விநாயகர், முருகன், கரிய மாணிக்க பெருமாள், நடராஜர் சிவகாம சுந்தரி ஆகிய சன்னிதிகளில் பாலாலயம் செய்யப்பட்டு, சில மாதங்களாக புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகின்றன. இப்பணிகள் தற்போது நிறைவு பெறும் நிலையில் உள்ளதையடுத்து, வரும் 30ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !