உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தாசலம் கோவில்களில் ஆடிக்கிருத்திகை சிறப்பு வழிபாடு

விருத்தாசலம் கோவில்களில் ஆடிக்கிருத்திகை சிறப்பு வழிபாடு

விருத்தாசலம்: ஆடிக்கிருத்திகையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகருக்கு சிறப்பு பூஜை நடந்தது.


விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று காலை வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர், 28 சிவ ஆகம சன்னதியில் உள்ள குமரேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.  மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர், சுவாமிக்கு 12 வகையான திரவிய பொருட்களால் அபிேஷகம், வெள்ளிக்கவசம் சாற்றி தீபாராதனை நடந்தது. மாலை சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர். இதேபோல், கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள வேடப்பர், பெரியகண்டியங்குப்பம் வெண்மலையப்பர் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !