திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் பவித்ர உற்ஸவம்
ADDED :1161 days ago
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் இன்று பவித்ர உற்ஸவம் நிறைவடைகிறது. சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் செப்.6ல் திருமாமணி மண்டபத்தில் 108 கலச அபிஷேகம் உற்ஸவருக்கு நடந்தது. மாலை யாகசாலை பூஜைகள் நடந்து சுவாமிக்கு காப்பு கட்டப்பட்டது. பவித்ர மாலைகளுக்கு யாகசாலை பூஜை, ஹோமங்கள் நடந்தன. நேற்று காலை 10:00 மணிக்கு யாகசாலையிலிருந்து பவித்ர மாலைகள் புறப்பாடாகி மூல ஸ்தான சுவாமிகளுக்கு சார்த்தப்பட்டது. தொடர்ந்து மகா சாந்தி ஹோமம் நடந்தது. மாலை உற்ஸவ பெருமாள் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி, சிறப்பு தீபாராதனை நடந்தது. இன்று காலை 10:00 மணிக்கு நவகலஸ அபிஷேகம் நடைபெறும். இரவு யாக சாலையிலிருந்து கடம் புறப்பாடாகி மூலவருக்கு கும்ப சக்தி ஆவாகனம் நடந்து பவித்ர உற்ஸவம் நிறைவடையும்.