சிவயோகி சித்தர் குரு பூஜை விழா
ADDED :1129 days ago
கூடுவாஞ்சேரி:நந்திவரத்தில் உள்ள மல்லீஸ்வரர் கோவில் வளாகத்தில், தினகர சிவயோகி சித்தர் ஜீவ சமாதி உள்ளது.வடபழனி வண்டி சாமி என, பக்தர்களால் அழைக்கப்படும் இவரது ஒன்பதாம் ஆண்டு குரு பூஜை, நேற்று நடந்தது.மல்லீஸ்வரர் கோவில் பக்தர்கள் மற்றும் தினகர சிவயோகி சித்தர் சேவா குழுவினர் பங்கேற்று, சிறப்பு பூஜைகள் செய்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.