உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுயம்பு பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சுயம்பு பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி முக்கந்தர் தெரு சுயம்பு பத்திரகாளியம்மன் கோயில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. செப். 7ம் தேதி மாலை 5:00 மணிக்கு அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜையுடன் யாக பூஜைகள் துவங்கியது. நேற்று காலை 7:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைகள் தொடர்ந்து நடந்தது. 9:30 மணிக்கு கோயில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கும், விநாயகர் ஆதிசேஷன் கருப்பையா சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !