ஓணம் பண்டிகை: பல்லச் சேனாவின் ஓணத்தல்லு நிகழ்ச்சி கோலாகலம்
பாலக்காடு: ஓணம் பண்டிகையை ஒட்டி பல்லச் சேனாவின் ஓணத்தல்லு நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது புகழ்பெற்ற பல்லச்சேன மீன்குளத்தி பழய காவில் பகவதி கோவில். இக்கோவில் அருகேயுள்ள நாயர் சமுதாயத்தின் ஓணம் பண்டிகையை ஒட்டியுள்ள முக்கிய நிகழ்ச்சி ஓணத்தல்லு (முதுகில் அறையல்). நடப்பாண்டு பண்டிகையையொட்டியுள்ள ஓணத்தல்லு அவிட்டம் நாளான நேற்று மாலை நடந்தது. இரு அணிகளாக பிரிந்து மூலவரை வணங்கி நெற்றியில் திருநீரையிட்டு பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் முதுகில் போட்டிபோட்டு அறைவது நிகழ்ச்சி. அறையில் சிலரில் முதுகில் ஐந்து விரல்களும் பதிந்திருக்கும். இச்சடங்கு சமுதாய தலைவர்களின் மேல் பார்வையில் நடக்கின்றன. நிகழ்சரிக்கு பிறகு சமுதாயத் தலைவரின் ஆசியுடன் குளத்தில் நீராடும் வைபவவும் நடந்தது. இந்நிகழ்ச்சியை ஏராளமானோர் திரண்டு வந்து கண்டு மகிழ்ந்தனர்.
இது குறித்து சமுதாய தலைவர் முரளிதரன் கூறியதாவது: இது மிகவும் புராதனமான ஒரு சடங்காகும். எவ்வளவு ஆண்டு பழமையுடையது என்று கூற முடியாது. எங்களது நினைவுள்ள காலம் முதல் நிகழ்ச்சி நடந்து வருகிறது. நம் சமுதாயத்தை போர் வீரர்களாக அன்று கண்டிருந்தனர். வேட்டைக்கொருமகன், சமுதாய வீரர்களுடன் சேர்ந்து ஒரு யுத்தம் செய்துள்ளதாகவும் அதை நினைவுபடுத்தும் வகையில் இந்நிகழ்ச்சியை பல்லாண்டுகளாக நடத்தி வருகின்றோம்.