ரத்தினகிரி முருகன் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம்
ADDED :1127 days ago
ரத்தினகிரி: ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில், புதிய தேர் வெள்ளோட்டம் நடந்தது. ராணிப்பேட்டை மாவட்டம், ரத்தினகிரி பாலமுருகன் சுவாமி கோவிலில், 32 அடி உயரமுள்ள மரத்தினால் ஆன புதிய தேர் கட்டப்பட்டது. அதன் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. கோவில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை சுவாமிகள் தலைமை வகித்தார். ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். கலவை சச்சிதானந்த சுவாமிகள், சித்தஞ்சி காளிபீடம் மோகனாந்தர், தி.மு.க.,– எம்.எல்.ஏ., க்கள் ஆற்காடு ஈஸ்வரப்பன், வேலுார் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.