ஆலூர் தேசி லிங்கேஸ்வரர் கோயிலில் பங்குனி சிறப்பு பூஜை.
ADDED :196 days ago
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே சின்னமத்தம்பாளையம் ஆலூர் தேசி லிங்கேஸ்வரர் கோயிலில் பங்குனி மாத முதல் திங்கட்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. அர்ச்சகர் சிவ தினேஷ் சிறப்பு பூஜைகளை செய்தார். சிறப்பு மலர் அலங்காரத்தில் தேசி லிங்கேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில், சுற்றுப்புற கிராம மக்கள், கோயில் குல மக்கள், திரளான பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.