ராமகிருஷ்ணா மடத்தில் மாணவர்களுக்கான தன்னம்பிக்கை கருத்தரங்கம்
ADDED :1199 days ago
தஞ்சாவூர்: தஞ்சாவூர், ராமகிருஷ்ணா மடத்தில், வரும் 12ம் தேதி கல்லூரி மாணவர்களுக்கான தன்னம்பிக்கை கருத்தரங்கம் நடைபெறுகிறது.
1893, செப் 11ம் தேதி, சுவாமி விவேகானந்தர் சிகாகோ சர்வசமய மாநாட்டில் பாரதத்தின் பெருமைப்பாருக்கும் பறைசாற்றிய தினத்தை முன்னிட்டு, வரும் 12ம் தேதி காலை 10.00 மணிக்கு நடைபெறும் இந்த கருத்தரங்கம் தஞ்சாவூர், ராமகிருஷ்ணா மடம் மற்றும் ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இனைந்து நடத்துகின்றனர். விழாவில் சுவாமி விமூர்த்தானந்தர் ஆசியுரை வழங்குகிறார். முனைவர் சிவசுப்பிரமணியம் தலைமை வகிக்கிறார். மாணவர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம்.