சிவகங்கை கோயில் விழா : எருமைகளை பலியிட்டு நேர்த்திக்கடன்
ADDED :1202 days ago
சிவகங்கை: சிவகங்கை அருகே பழமலைநகரில் காளி, மீனாட்சி, முத்துமாரியம்மன், மதுரைவீரன் சுவாமி கோயில் விழாவை முன்னிட்டு, சுவாமிக்கு எருமைகள் பலியிடப்பட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சிவகங்கை அருகே பையூர் உள்ள நரிக்குறவர் குடியிருப்பில் 200க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பத்தினர் உள்ளனர். இங்கு ஆண்டுதோறும் காளி, மீனாட்சி, மதுரைவீரன், முத்துமாரியம்மன் சுவாமிகளுக்கு மூன்று நாட்கள் திருவிழா நடத்துவர். இந்தாண்டு விழா செப்., 9ம் தேதி பெருமாள் பூஜையுடன் தவங்கியது. செப்., 10 மாலை 4.00 மணிக்கு பால்குடம், 12 அடி அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்று மாலை 6.00 மணிக்கு சாமியாட்டம், மாவிளக்கு பூஜை நடந்தது. செப்., 11ல் காலை 6.00 மணி்க்கு காளியம்மனுக்கு 14 எருமை மாடுகளை பலியிடப்பட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.