உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இராயம்பாளையம் மாரியம்மன் கோவில் விழா

இராயம்பாளையம் மாரியம்மன் கோவில் விழா

அவிநாசி: மாரியம்மன் கோவில் ஒன்பதாம் ஆண்டு விழா நடைபெற்றது. அவிநாசி அடுத்த இராயம்பளையத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் ஒன்பதாம் ஆண்டு கும்பாபிஷேக விழாவை  முன்னிட்டு. நேற்று விநாயகர் வழிபாடு. கலசம், சங்கு பூஜை, மூல மந்திர ஹோமம், 108 சங்காபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து கணபதி ஹோமம்  நடைபெற்றது. இதனையடுத்து சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்று பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலித்தார். ஊர் பொதுமக்கள் மற்றும் நேதாஜி இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் அனைவருக்கும்  அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !