பகவதி அம்மன் கோயிலில் அகல் விளக்கு பூஜை
ADDED :1125 days ago
தேவிபட்டினம்: தேவிபட்டினம் சித்தார்கோட்டை அருகே அத்தியூத்து பகவதிஅம்மன் கோயிலில், ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு, அகல் விளக்கு பூஜை நடந்தது. முன்னதாக மூலவர் பகவதி அம்மனுக்கு, சந்தனம், குங்குமம், பால், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி, சக்தி ஸ்தோத்திரம் அர்ச்சனை, நாமாவளி பஜனை, ஆன்மீக சொற்பொழிவு உள்ளிட்டவைகள் நடந்தது. ஏற்பாடுகளை மாதாந்திர வழிபாட்டுக் குழுவினர் செய்திருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.