வடகுறும்பூர் முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்
ADDED :1206 days ago
உளுந்தூர்பேட்டை: வடகுறும்பூர் கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது உளுந்தூர்பேட்டை தாலுகா வடகுறும்பூர் கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் 9ம் தேதி நடந்தது. அதனையொட்டி கடந்த 8ம் தேதி விக்னேஸ்வர பூஜை, முதல் காலை யாக சாலை ஹோமம், பூர்ணாகதி தீபாரதனை வழிபாடு நடந்தது. 9ம் தேதி கோ பூஜை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து காலை 7.30 மணியளவில் முத்துமாரியம்மன் கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.