நாகராஜா கோவிலில் ஆவணி இறுதி ஞாயிறு வழிபாடு : பக்தர்கள் தரிசனம்
ADDED :1126 days ago
நாகர்கோவில்: நாகராஜா கோவிலில் ஆவணி இறுதி ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நாகர்கோவில், நாகராஜா கோவிலில் ஆவணி இறுதி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். ஆவணி இறுதி ஞாயிற்றுக்கிழமை என்பதால்
வெளியூர்களில் இருந்து பக்தர்கள் குவிந்தனர்.இதனால், கோவிலை தாண்டி, கோவிலுக்கு வெளியேயும் நீண்டவரிசையில் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கோவில்
வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு மஞ்சள் தூவி, பால் ஊற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர். நாகராஜா கோவிலில் பொது ப்பணித்துறை சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் மதிய உணவுஉண்டன ர். பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்ததால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.