உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்

அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்

பழநி: பழநி,பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆவணி மாத பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது.

பழநி கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்சவ திருவிழா செப்.4ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. செப்.10ல் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அகோபில வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. செப்.11ல் பாரிவேட்டை நடைபெற்றது. ஸ்ரீதேவி,பூதேவி சமேத அகோபில வரதராஜ பெருமாள் தேரற்றம் நடைபெற்றது. இன்று (செப்.12ல்) காலை 7:16 மணிக்கு திருத்தேரோட்டம் கோயில் முன்பிருந்து துவங்கியது. பாலசமுத்திரத்தின் முக்கிய வீதிகளில் நகர்வலம் வந்து காலை 8:21 மணிக்கு கோவில் முன் வந்தது. தேரோட்டத்திற்கு தீயணைப்புத் துறையினர், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !