உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேலமடையில் பாமா, ருக்மணி, கோல கண்ணன் கோயில் கும்பாபிஷேகம்

மேலமடையில் பாமா, ருக்மணி, கோல கண்ணன் கோயில் கும்பாபிஷேகம்

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அருகே மேலமடை கிராமத்தில் உள்ள பாமா, ருக்மணி சமேத கோகுல கண்ணன் கோயிலில் இன்று கும்பாபிஷேக விழா நடந்தது.

நேற்று முதல் காலயாகசாலை பூஜைக்கு பிறகு இன்று காலை கோ பூஜை, நாடி சந்தனம், பூர்ணாகுதி, கடம் புறப்பாடு உள்ளிட்டவைகள் நடந்தது. காலை 10 மணியளவில் கோபுர விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. மூலவர் பாமா ருக்மணி சமேத கோகுல கண்ணனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை யாதவர் சங்கத்தினர், மேலமடை மகளிர் மன்றத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !